வெள்ளி, 29 செப்டம்பர், 2023

இரவு பகலாக விடாது ஒலிக்கும் கோஷங்கள் - 6வது நாளாக தொடரும் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்


 சென்னை நுங்கம்பாக்கம் டி பி ஐ யில் பல ஆசிரியர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

 பள்ளிக்கல்வித்துறை வளாகம் ஸ்தம்பித்தது.

 யூடியூப் காணொளி 👇

https://youtu.be/Pa9-viYMTFQ?si=tSa06-X8GxhJtAq8

சூறாவளியிலும், மழையிலும் வாழ்வாதாரத்திற்காக போராடும் பகுதி நேர ஆசிரியர்கள்...


    சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் அரசுப் பள்ளியில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் 5வது நாளாக தொடர்ந்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

 தற்பொழுது பலமான சூறாவளிக் காற்றும், மழையும் பெய்து கொண்டு உள்ளது. அதனையும் பொருட்படுத்தாது பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

   பொதுமக்களும், பல்வேறு கட்சிகளும் ஆதரவு கொடுத்த நிலையிலும் அரசு எதனையும் கண்டுகொள்ளாத நிலையில் ஆசிரியர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர் என்பது வருந்தத்தக்கது.

   எனவே, அரசு வறுமையில் வாடும் பகுதி நேர ஆசிரியர்களின் சிக்கலைத் தீர்த்து வைப்பதற்கு, தேர்தல் வாக்குறுதி 181ஐ நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு தொடர்ந்து போராடிக் கொண்டுள்ளனர்.


பகுதி நேர ஆசிரியர்களை ஏமாற்றி விட்டாரா ஸ்டாலின் ? youtube காணொளி

பகுதி நேர ஆசிரியர்களை ஏமாற்றிவிட்டாரா ஸ்டாலின்?

 youtube காணொளி 👇

https://youtu.be/l6nC3MeXDf8?si=2wqKaHBrM5ryCmw8

வியாழன், 28 செப்டம்பர், 2023

சென்னை டி பி ஐ யில் 5வது நாளாக தொடரும் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்



 

சென்னை டி பி ஐ யில் 4வது நாளாக தொடரும் பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம்

 


     சென்னை நுங்கம்பாக்கம் டி பி ஐ யில் இன்று செப் 28, வியாழக்கிழமை பகுதி நேர ஆசிரியர்கள்  வாக்குறுதி எண் 181ஐ நிறைவேற்றக்கோரி தொடர்ந்து 4வது நாளாக காத்திருப்பு மற்றும் உண்ணாநிலைப் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

 ஒன்று பணி நிரந்தரம் அல்லது தகுந்த ஊதிய உயர்வுடன் முழு நேர வேலை இரண்டில் ஒன்றுக்கான அரசாணை பெறாமல் இப் போராட்டம் முற்றுப்பெறாது என்று மிகுந்த உறுதியுடன் போராட்டத்தை தொடர்ந்து கொண்டுள்ளனர்.

  அரசு உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு, இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று பிற அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் 12 ஆண்டுகளுக்கு மேலாக போராடும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே நடைபெற்ற செவிலியர் போராட்டம் முடிவுக்கு வந்தாலும், மேலும், டெட் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோரும் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளனர். இதனால் அரசு பள்ளிக் கல்வித் துறை வளாகம் மிகவும் பரபரப்பு அடைந்துள்ளது.

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

நிதி இல்லை என்று சொல்லும் விடியல் ஆட்சி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் - காணொளி

அரசுப் பள்ளியில் பணி புரியும் பகுதி நேர ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் காத்திருப்புப் போராட்டம் குறித்த youtube காணொளி 

https://youtu.be/Y9A9875AjSE?si=Niu5CS08sVp8uP_P

பகுதிநேர ஆசிரியர்களின் டிபி ஐ யில் தொடரும் 2ம் நாள் போராட்டம்


    அரசுப் பள்ளியில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் செப் 26 செவ்வாய்க்கிழமை இன்று இரண்டாம் நாளாக காத்திருப்பு மற்றும் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதி 181 ஐ நிறைவேற்றக்கோரி போராட்டத்தை தொடர்கின்றனர்.


ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரத்தை வலியுறுத்தி இன்று செப் 25 முதல் சென்னை டி பி ஐ யில் உண்ணாநிலை மற்றும் காத்திருப்பு போராட்டம்



        பணி நிரந்தரத்தை வலியுறுத்தும் பகுதி நேர ஆசிரியர்களின் மாபெரும் உண்ணாநிலை மற்றும் காத்திருப்புப் போராட்டம்  சென்னை டி பி ஐ - யில் இன்று திங்கள் கிழமை செப்டம்பர் 25, 2023 முதல் தொடங்குகிறது.

 தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து  அரசுப் பள்ளியில் 12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் ஆளும் திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி எண் 181 ஐ நிறைவேற்றக்கோரி பெருந்திரளாகக் கலந்து கொண்டு இன்று முதல் வலிமையான போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.



புதன், 20 செப்டம்பர், 2023

தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கல்வி அமைச்சர் அலுவலகத்தில் சந்திப்பு





 தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் கல்வி அமைச்சருடன் சந்திப்பு

   மாண்புமிகு கல்வி அமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்த போது சரிவர பதில் இல்லை. அதனால், காத்திருந்து மீண்டும் அவர் வெளியே வரும்போது வழிமறித்து மிகுந்த ஆதங்கத்துடன் நீண்ட தூரத்தில் இருந்து இரவெல்லாம் பயணப்பட்டு வருகின்றோம் ; வந்த ஒரு நொடியில் வெளியே அனுப்பி விடுகின்றீர்களே என்று கேட்டோம்.

    அதன் பிறகு, பத்து நிமிடம் பொறுமையாக பதில் அளித்தார்.
ஒவ்வொரு முறையும் 'படிப்படியாக' என்று பதில் சொல்வார். அது, இப்போது இல்லை. மாற்றாக, 'அவசரப்படாதீர்கள்' என்று சொன்னார்.

    அதற்கு திருமதி.ஜெயப்பிரியா அவசரம் இல்லை, 12 ஆண்டு காலமாக மட்டுமே காத்திருக்கிறோம் என்றும் பதில் அளித்தார்.

    மாண்புமிகு நிதி அமைச்சரும், மாண்புமிகு முதல்வரிடம் பேசிக்கொண்டேதான் இருக்கிறேன் என்றும் சொன்னதாகக் கூறினார்.

   தேர்தல் வாக்குறுதி 181ஐ நிறைவேற்றுங்கள் என்று சொன்னோம். அதற்கு கண்டிப்பாக இந்த அரசு நிறைவேற்றும் என்று இன்முகத்துடன் பதில் அளித்தார்.

    இந்நிகழ்வின் மூலம், பகுதி நேர ஆசிரியர்கள் மீண்டும் மிக மோசமான நிலையிலேயே இருப்பதை அறிந்து வறுமையிலும் வருத்தத்திலும் உள்ளனர்.

 இனி முதல்வர் மனது வைத்தால் மட்டுமே முடியும்.

 எனவே, எப்போது விடியல் வரும் என்று ஏங்கி மீண்டும் மீண்டும் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


Part-time teachers to sit on hunger strike in Chennai from Sept 25


 

சனி, 9 செப்டம்பர், 2023

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

  

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு.

  3 சதவீதம் வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவலைப்படி உயர்த்தப்படலாம் எனத் தகவல்...



வெள்ளி, 8 செப்டம்பர், 2023

பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களின் பணி மாறுதல் கலந்தாய்வில் கடும் அதிருப்தி

   தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் எட்டுத் துறைகளில் பகுதி நேர ஆசிரியர்கள் 2012ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகின்றனர்.

  பணி நிரந்தரத்தை வலியுறுத்தி கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பல கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

  கடந்த ஆட்சியில் நியமன ஊதியம் 5000லிருந்து முறையே பல இடைவெளிகளில் 7000, 7,700 மற்றும் இறுதியில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு 10,000 என்ற அளவில் மட்டுமே ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

  இது கடை நிலை ஊழியரின் ஊதியத்தை விட மிக மிகக் குறைவானதாகும்.

  நடைபெறும் திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியில் பணிநிலைப்பு இடம்பெற்றிருந்தும், இரண்டரை வருடங்கள் கடந்தும் துளி அளவும் முன்னேற்றம் இல்லை.

  விலைவாசி பல மடங்கு உயர்ந்து விட்ட போதிலும், சிறு ஊதிய உயர்வு கூட வழங்கப்படவில்லை.

  பல போராட்டங்களுக்குப் பிறகும், நிதி சம்பந்தமில்லாத ஓய்வு வயது 58-60 உயர்வு, சாதாரணமாக வழங்கப்படக்கூடிய பணி மாறுதல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

  அதிலும் பல காலிப் பணியிடங்கள் காட்டப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

  இதில் தற்போது நடைபெற்று வரும் உடற்கல்வி ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுமே திருப்தி அற்ற முறையில் கூடுதல் பணியிடங்கள் காட்டப்படவில்லை.

  எதையும் கண்டுகொள்ளாத அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது.

  பகுதி நேர ஆசிரியர்கள் இனத்தைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளுக்குமே ஏதோ ஒரு நன்மை நடந்தேறி உள்ளது.

  மிகக் குறைந்த ஊதியத்தில் கடும் சிரமத்தில் வாடி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, அரசு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 அரசிடம் ஒவ்வொரு முறை முறையிடும்பொழுதும் நிதிநிலைமை சீரான உடன் படிப்படியாக வழங்கப்படும் என்ற ஒரே வாசகம் மட்டுமே பதிலாக வழங்கப்படுகிறது.

  இதனால், 12,500 பகுதி நேர ஆசிரியர்களும், அவர்களது குடும்பங்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

  எனவே, சென்னை பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் வரும் 2023 செப்டம்பர் 25ல் மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் அறிவித்துள்ளனர்.

 பொன். சங்கர்