புதன், 20 செப்டம்பர், 2023

தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கல்வி அமைச்சர் அலுவலகத்தில் சந்திப்பு





 தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் கல்வி அமைச்சருடன் சந்திப்பு

   மாண்புமிகு கல்வி அமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்த போது சரிவர பதில் இல்லை. அதனால், காத்திருந்து மீண்டும் அவர் வெளியே வரும்போது வழிமறித்து மிகுந்த ஆதங்கத்துடன் நீண்ட தூரத்தில் இருந்து இரவெல்லாம் பயணப்பட்டு வருகின்றோம் ; வந்த ஒரு நொடியில் வெளியே அனுப்பி விடுகின்றீர்களே என்று கேட்டோம்.

    அதன் பிறகு, பத்து நிமிடம் பொறுமையாக பதில் அளித்தார்.
ஒவ்வொரு முறையும் 'படிப்படியாக' என்று பதில் சொல்வார். அது, இப்போது இல்லை. மாற்றாக, 'அவசரப்படாதீர்கள்' என்று சொன்னார்.

    அதற்கு திருமதி.ஜெயப்பிரியா அவசரம் இல்லை, 12 ஆண்டு காலமாக மட்டுமே காத்திருக்கிறோம் என்றும் பதில் அளித்தார்.

    மாண்புமிகு நிதி அமைச்சரும், மாண்புமிகு முதல்வரிடம் பேசிக்கொண்டேதான் இருக்கிறேன் என்றும் சொன்னதாகக் கூறினார்.

   தேர்தல் வாக்குறுதி 181ஐ நிறைவேற்றுங்கள் என்று சொன்னோம். அதற்கு கண்டிப்பாக இந்த அரசு நிறைவேற்றும் என்று இன்முகத்துடன் பதில் அளித்தார்.

    இந்நிகழ்வின் மூலம், பகுதி நேர ஆசிரியர்கள் மீண்டும் மிக மோசமான நிலையிலேயே இருப்பதை அறிந்து வறுமையிலும் வருத்தத்திலும் உள்ளனர்.

 இனி முதல்வர் மனது வைத்தால் மட்டுமே முடியும்.

 எனவே, எப்போது விடியல் வரும் என்று ஏங்கி மீண்டும் மீண்டும் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக