சென்னை நுங்கம்பாக்கம் டி பி ஐ யில் இன்று செப் 28, வியாழக்கிழமை பகுதி நேர ஆசிரியர்கள் வாக்குறுதி எண் 181ஐ நிறைவேற்றக்கோரி தொடர்ந்து 4வது நாளாக காத்திருப்பு மற்றும் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒன்று பணி நிரந்தரம் அல்லது தகுந்த ஊதிய உயர்வுடன் முழு நேர வேலை இரண்டில் ஒன்றுக்கான அரசாணை பெறாமல் இப் போராட்டம் முற்றுப்பெறாது என்று மிகுந்த உறுதியுடன் போராட்டத்தை தொடர்ந்து கொண்டுள்ளனர்.
அரசு உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு, இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று பிற அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் 12 ஆண்டுகளுக்கு மேலாக போராடும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே நடைபெற்ற செவிலியர் போராட்டம் முடிவுக்கு வந்தாலும், மேலும், டெட் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோரும் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளனர். இதனால் அரசு பள்ளிக் கல்வித் துறை வளாகம் மிகவும் பரபரப்பு அடைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக