தீப ஒளித் திருநாள்
உதிக்கும் சூரியனில்
வெளிச்சம் வரும்
என்று நம்பி
வாக்களித்து விட்டு
பட்டாசு வெளிச்சத்திலும்
தீப ஒளியிலும்
வேடிக்கை மட்டுமே
பார்த்துக் கொண்டு
விடியலைத் தேடும்
விட்டில் பூச்சிகளாய்
நிதியைச் சொல்லி
நீதியில்லா ஆட்சியில்
பசித்திருக்கும்
பகுதி நேர ஆசிரியர்கள்
பொன். சங்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக